உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடுவது தொடர்பாக புதுச்சேரி மாநில அ.தி.மு.க, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது;ஜெயலலிதா பிறந்த நாளை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின், தட்டு வண்டி, தள்ளுவண்டி வேட்டி சேலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க. நடத்திய பேரணி கண்டு ஆளும் கட்சி, இண்டியா கூட்டணி அச்சமடைந்துள்ளது. பா.ஜ., கட்சியில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. இண்டியா கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் உள்ளது. காங். கட்சியை எதிர்கட்சியான தி.மு.க. புறக்கணித்து வருகிறது.தி.மு.க.வை கம்யூ., வி.சி. கட்சி புறக்கணித்துள்ளது என பேசினார். கூட்டத்தில்,துணை தலைவர் ராஜாராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கோமலா, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை