உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.ஜே., பள்ளியில் பொங்கல் விழா

ஏ.ஜே., பள்ளியில் பொங்கல் விழா

புதுச்சேரி, : புதுச்சேரி ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதில் ஆசிரியர்கள் பிரிந்து சேரன், சோழன், பாண்டியன் எனும் பெயர்களில் சிறப்பு குழுக்களை அமைத்தனர். இதையடுத்து, பொங்கல் குறித்து கவிதை, கதை மற்றும் நடனம் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் சேரன் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. இதைத்தொடர்ந்து, மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பசுங்கன்றுக்கு மாலை அணிவித்து, அதற்கு பூஜை செய்து மாட்டுப் பொங்கல் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.விழாவில் ஆசிரியர்கள் மோகனப்பிரியா, சுருதி, கார்த்திகா, ரீனா, இளவரசி, மங்கலட்சுமி, முத்துகுடி மற்றும் புஷ்பலதா, மகேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக அபிேஷகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி டாக்டர் லோகேஷ் பங்கேற்றார். மாணவர்கள், பெற்றோர்களுக்கு பொங்கல் வழங்கி, ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை