மேலும் செய்திகள்
திறனாய்வு திறமை போட்டி
06-Apr-2025
புதுச்சேரி : சாரதா கங்காதரன் கல்லுாரியில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரியில் மாணவ, மாணவிகளின் சாதனைகள் மற்றும் மாணவிகளின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் சைட்டேஷன் டே கொண்டாடப்பட்டது.கல்லுாரி துணைத் தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார். கல்லுாரி வேலை வாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஆனி, 2024-25ம் கல்வி ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் துணை மண்டல வேலை வாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி கலந்துகொண்டு பேசுகையில், 'மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.துணை மண்டல உதவி வேலை வாய்ப்பு அதிகாரி ரவீந்திரநாத் மண்டல், கல்லுாரி முதல்வர் பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கல்லுாரியில் வேலை வாய்ப்பினை பெற்ற மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
06-Apr-2025