உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காரைக்காலில் தடகள போட்டி: மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

 காரைக்காலில் தடகள போட்டி: மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

காரைக்கால்: காரைக்காலில் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். காரைக்காலில், அகில இந்திய தடகள சங்க அறிவுறுத்தலின்படி காரைக்கால் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் புறவழிச்சாலை உள்ள விளையாட்டு மைதானத்தில் அஸ்மிதா தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை, மாவட்ட தடகள சங்க தலைவர் லெனின்ராஜ் துவக்கி வைத்தார். இதில் 14 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டி நடந்தது. இதில் மூன்று பிரிவுகளில் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக தடகள சங்க செயலர் சந்திரமோ கன் வரவேற்றார். நிகழ்ச்சியில் உடற்கல்வி விரிவுரையாளர் வெங்கடேஷ், சர்வதேச இறகு பந்து வீராங்கனை ஜனனிக்கா மற்றும் இறகு பந்து பயிற்சியாளர் தட்சணாமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் விஷ்வேஷ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தடகள சங்க செயலர் சந்திரமோகன், வணிதாசன், குணசேகரன், ராஜ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ