உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கம் சார்பில், குழந்தை கள் தினத்தை முன்னிட்டு, வட்டம் மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நடுநிலைப் பிரிவில் ஓவிய போட்டியிலும், உயர்நிலைப் பிரிவில் நடனம், பேச்சு, மற்றும் கட்டுரை போட்டியிலும், மேல்நிலை பிரிவில் பேச்சு போட்டி, நடனத்தில் முதல் பரிசுகளை பெற்றது. பரிசு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு, பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினார். தொடர்ந்து பயிற்சி அளித்த விரிவுரையாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்தினார். விழாவில் பள்ளி ஆசிரி யர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்