உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

புதுச்சேரி: பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேரு எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று பரிசுகளை வழங்கினார்.உருளையன்பேட்டை தொகுதிக்குட்ட பகுதிகளில் கடந்தாண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மனிதநேய மக்கள் சேவை இயக்கம், சுமதி அறக்கட்டளை சார்பாக ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, கோவிந்த சாலை பாரதிபுரம் மெயின் ரோடு பகுதியில் நடந்தது.தேர்வு நேரம் என்பதால் மாணவ மாணவிகளுக்கு சிரமமின்றி வீடு வீடாக சென்று பரிசு வழங்கப்பட்டது. நேரு எம்.எல்.ஏ., மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மனிதநேய மக்கள் சேவை இயக்க மாணவர் அணி பொறுப்பாளர் ரகோத்தமன், நிர்வாகிகள் வாசு, செல்வம், ஏழுமலை, இளங்கோ, அண்ணாதுரை, குமார் முருகன், உதி, வெங்கடேஷ், ஜெயக்குமார், தினேஷ், பழனி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை