உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுக்கடை ஊழியர் தற்கொலை

மதுக்கடை ஊழியர் தற்கொலை

அரியாங்குப்பம்: இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற மதுக்கடை கேஷியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நயினார்மண்டபம் நாகம்மாள் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பிரவின்குமார், 22; இவர் புதுச்சேரியில் உள்ள மதுக்கடை ஒன்றில் கேஷியராக வேலை செய்து வந்தார். இவர் தொடர்ந்து மது குடித்ததால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இரண்டு முறை அவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டு மாடியில் உள்ள அறையில் அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை