உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெற்றோருக்கு துணையாக இருக்க வேண்டும் : மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அறிவுரை

பெற்றோருக்கு துணையாக இருக்க வேண்டும் : மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அறிவுரை

காரைக்கால் : 'புதிய கண்டுப்பிடிப்புகளை மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரியில் 5வது பட்டமளிப்பு விழா நடந்தது.எம்.எல்.ஏ.,க்கள் சிவா, திருமுருகன் முன்னிலை வகித்தனர். சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ., வரவேற்றார். கலெக்டர் குலோத்துங்கன், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அமன் சர்மா, பேராசிரியர்கள் ஆராமுதன், சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்லுாரியில் 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை படித்த 176 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது;காமராஜர் கல்லுாரிக்கு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மாணவர்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட்டு வருகிறது.காரைக்காலில் 460 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் கல்லுாரி கட்டடம் முடியும் நிலையில் உள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த அனைவரும் பயன் பெறுவர். காரைக்காலில் புதிய மருத்துவக் கல்லுாரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.காரைக்கால் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் அக்கரையுடன் செயல்பட்டு வருகிறது. புதிய கண்டுப்பிடிப்புகளை மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்