உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருட்டு மர்ம நபருக்கு வலை

பைக் திருட்டு மர்ம நபருக்கு வலை

புதுச்சேரி: வெளியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் பைக்கை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். வாணரப்பேட்டை தாமரை நகரை சேர்ந்தவர் குமார், 62; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 6ம் தேதி, தனது பைக்கை, கடலுார் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்தி விட்டு, வெளியூருக்கு சென்றார். மாலையில் வந்து பார்க்கும் போது, பைக் காணாமல் போயிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ