உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணை சபாநாயகர் கொடுத்தால் ஏற்பேன் பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் திடீர் பல்டி

துணை சபாநாயகர் கொடுத்தால் ஏற்பேன் பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் திடீர் பல்டி

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்த பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் திடீர் பல்டி அடித்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிந்து என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். பின் படிப்படியாக அமைச்சர்கள் பதவி ஏற்றனர். என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்நிலையில் 16வது சட்டபையின் முதல் கூட்டத் தொடர் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் நடந்து வருகிறது. சட்டசபைக்கு நிரந்தர சபாநாயகரை நியமிக்க எம்.எல்.ஏ.க்கள்., வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் சபாநாயகரை கட்சி முடிவு செய்வதில்லை. எம்.எல்.ஏ.,க்கள், தான் முடிவு செய்வார்கள். அந்த அடிப்படையில் நான் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவேன் என, தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் கூறுகையில், முதல்வர் ரங்கசாமியால் பலர் வெற்றி பெற்றுள்ளனர். அவரது விருப்பம் அன்பழகன் எம்.எல்.ஏ., தான் சபாநாயகர் என முன்மொழிந்தால், அவரை மீறி ஒன்றும் செய்ய முடியாது. அதன்பிறகு எனக்கு துணை சபாநாயகர் கொடுங்கள் என கேட்பேன், முதல்வர் ரங்கசாமி எனக்கு துணை சபாநாயகர் கொடுப்பேன் என்றால் அதனையும் ஏற்றுக் கொள்வேன், என்றார். இந்த திடீர் பல்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி