உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி ஆசிர்வாத தீபம் பா.ஜ., வேண்டுகோள்

பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி ஆசிர்வாத தீபம் பா.ஜ., வேண்டுகோள்

  புதுச்சேரி: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி வரும் 17ம் தேதி அனைத்து வீட்டிலும் ஆசிர்வாத தீபம் ஏற்ற வேண்டும் என பா.ஜ., தலைவர் ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி பா.ஜ., சார்பில் வரும் 17ம் தேதி முதல் அடுத்த மாதம் 17ம் தேதி வரை சேவை மாதமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர் மக்களுக்கு சேவை செய்வதே தன் கடமையாக வைத்துள்ளார். மோடி பிரதமராக வந்த பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உலகளவில், 37 நாடுகளின் உயரிய விருதை பிரதமர் மோடி பெற்றுள்ளார். கொரானா தடுப்பூசி இந்தியாவில் இலவசமாக போடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கும் இலவசமாக அனுப்பபட்டது. உஜ்வாலா காஸ், முத்ரா கடன், உள்ளிட்ட மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எனவே பிரதமர் பிறந்த நாளையயொட்டி, அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர் நீண்ட நாள் வாழவேண்டி ஆசிர்வாத தீபம் ஏற்ற வேண்டும். அனைத்து வீட்டிலும் வரும் 17ம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆசிர்வாத தீபம் ஏற்ற வேண்டும்.   ஈஸ்வரன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கவர்னர் மற்றும் முதல்வர் பங்கேற்கின்றனர். மேலும் புதுச்சேரியில் மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட 40 இடங்களில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். உடன் முன்னாள் சபாநாயகர் செல்வம், பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநில துணைத் தலைவர் ரத்தனவேல், வில்லியனுார் மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், ஊடகத் துறை பொறுப்பாளர் நாகேஸ்வரன் ஆகியோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்