மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
3 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
3 hour(s) ago
புதுச்சேரி: ஆன்லைனில் கொப்பரை தேங்காய் விற்பனை செய்வதாக கூறி ரூ. 1.35 கோடி பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் திருடியது.புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், தமிழகம் முழுதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.துபாயில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கொப்பரை தேங்காய் வாங்கி அனுப்பும் ஆர்டர் கிடைத்தது. இதனால் ரெட்டியார்பாளையம் தனியார் நிறுவன உரிமையாளர், உடனடியாக அதிக அளவிலான கொப்பரை தேங்காய் வாங்க வேண்டும் என்பதால், ஆன்லைனில் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்வோர் குறித்த தகவல்களை தேடினார்.அதில் ஒருவரது மொபைல்போன் நம்பர் கிடைத்தது. அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது, அதிக அளவில் கொப்பரை தேங்காய் வேண்டும் என்றால், முன்பணம் செலுத்த வேண்டும் என கூறினார். கொப்பரை தேங்காய் வாங்குவதிற்கு முன் பணமாக மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் 4 மாதத்தில் ரூ. 1.35 கோடி பணத்தை அனுப்பி வைத்தார். அதன் பிறகு முன்பணம் பெற்ற நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் விசாரணை நடத்தி வருகிறனர். எஸ்.பி. பாஸ்கரன் கூறுகையில்; கடந்த 26 நாட்களில் மட்டும் புதுச்சேரியில் 582 நபர்கள், ஆன்லைன் மூலம் மோசடியில் சிக்கி ரூ. 8 கோடி வரை இழந்துள்ளனர். ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தும்போது அந்நிறுவனம் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago