உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கார்கள் நேருக்கு நேர் மோதல்

கார்கள் நேருக்கு நேர் மோதல்

புதுச்சேரி : புதுச்சேரியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வாலிபர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.தொடர் விடுமுறை முன்னிட்டு, கர்நாடாக மாநிலத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 11:55 மணியளவில், நேருவீதி வழியாக புதுச்சேரி கடற்கரை நோக்கி ஒரு கார் வந்தது. காந்தி வீதியில் இருந்து முத்தியால்பேட்டை நோக்கி ஒரு கார் சென்றது. இரண்டு கார்களும் காந்தி வீதி சந்திப்பில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரு கார்களின் முன் பகுதிகள் அப்பளம் போல் நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் லேசனா காயங்களுடன் உயிர் தப்பினர். காரில் வந்தவர்கள் கர்நாடாக மாநிலத்தை சேர்ந்தவர்கள். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கிய கார்களை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து போக்குவரத்து கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்