மேலும் செய்திகள்
பாரில் மயங்கி விழுந்த ஊழியர் பலி
03-Jul-2025
புதுச்சேரி : கார் பெயிண்டரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.முத்தியால்பேட்டை, கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயகுரு, 46; கார் ஸ்பிரே பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயகுரு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 8ம் தேதி செஞ்சி சாலை, தனியார் திருமண நிலையம் அருகே நின்றிருந்த ஜெயகுருவிடம் அங்கு மதுபோதையில் வந்த முத்தியால்பேட்டை மேட்டுத்தெரு கீர்த்தி, சரத் மற்றும் சிலர் தகராறு செய்து, அவரை தாக்கினர். ஜெயகுரு புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Jul-2025