உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிறையில் மொபைல் போன்கள் பறிமுதல் 4 கைதிகள் மீது வழக்கு

 சிறையில் மொபைல் போன்கள் பறிமுதல் 4 கைதிகள் மீது வழக்கு

புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் கைதி அறை, கழிப்பிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 மொபைல்களை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கைதிகள் மொபைல் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், சிறை அதிகாரிகள் கடந்த 26ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விசாரணை கைதிகள் அறை மற்றும் பொது கழிப்பிடம் அருகே பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின், பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் குறித்து விசாரணை நடத்தியதில், வில்லியனுாரில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட லட்சுமணன், முதலியார்பேட்டை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட விநாயகமூர்த்தி, உருளையன்பேட்டை கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட கேசவன், ரெட்டியார்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்ட ரங்கராஜ் ஆகியோர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறை அதிகாரி பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை