மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
25-Oct-2025
நெட்டப்பாக்கம்: பள்ளி அருகில் குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கல்மண்டபம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கல்மண்டபம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கல்மண்டபம் அந்தராசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சேஷப்பன் அய்யனார் 68, என்பவரது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை சேஷப்பன் அய்யனார் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Oct-2025