உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் மாஜி   முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் மாஜி   முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

அரியாங்குப்பம்: பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றவேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தவளக்குப்பம் தானாம்பாளையம், செயின்ட் ஜோசப் ஆங்கிலப் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை கண்டித்து காங்., சார்பில்,தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில், நேற்று காலை 10:30 மணியளவில், முன்னாள் அரசு கொறடா, அனந்தராமன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வர் நாராயணசாமி , வைத்திலிங்கம், எம்.பி., முன்னாள் அமைச்சர்கள், கந்தசாமி, ஷாஜகான், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., , முன்னாள் சபாநாயகர் பாலன், உட்பட காங்., கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர், நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி சோலை நகர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம், அதனை தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை என பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. தற்போது தவளக்குப்பம் தனியார் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. .இந்த வழக்கை போலீசார் உண்மையாக விசாரிக்கவில்லை. அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதால், போலீசார் மீது சந்தேகம் உள்ளது. தொகுதி எம்.எல்.ஏ., இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். பாரபட்சம் இல்லாமல் இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றவேண்டும். இதன் பின்னணியில், பா.ஜ., பொறுப்பாளர்கள் உள்ளனர். மாணவர்களை துாண்டி விட்டு, மறியல் செய்ய வைத்துள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.வைத்திலிங்கம் எம்.பி., கூறுகையில்,பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் போல, இதற்கு முன் பள்ளியில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதா என விசாரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தை முழுமையாக விசாரிக்கவேண்டும். மாணவர்களை பாதிக்காத வகையில், பள்ளியை, அரசு எடுத்த நடத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை