உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சவடீ விஸ்வரூப ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தரிசனம்

பஞ்சவடீ விஸ்வரூப ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தரிசனம்

புதுச்சேரி: பஞ்சவடீ விஸ்வரூப ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இஸ்ரோ சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தரிசனம் செய்தார்.புதுச்சேரி, பஞ்சவடீ ..ேஷத்திரத்தில் அருள்பாலித்து வரும் 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இஸ்ரோ சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்துவேல் நேற்று தரிசனம் செய்ய வருகை தந்தார்.அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாட்டிற்கு சேவையாற்றிட வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, அவருக்கு, மாலை, ராம வஸ்திரம், பட்டு வஸ்திரம், பரிவட்டம் அணிவித்து கோவில் சேர்மனும் பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலருமான கோதண்டராமன் மரியாதை செய்தார். அறங்காவலர்கள் பழனியப்பன், செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.வரும் 11ம் தேதி பஞ்சவடீ கோவிலில் அனுமன் ஜெயந்தி வைபவம் விமர்சையாக நடக்க உள்ளது. காலை 8:30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு 2,000 லிட்டர் பால் அபி ேஷகம் நடக்கிறது.முன்னதாக பூர்வாங்க பூஜைகள் இன்று 7ம் தேதி மாலை துவங்குகிறது. தொடர்ந்து 11ம் தேதி காலை வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை