உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வடிகால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

 வடிகால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் சார்பில், ரூ. 11 கோடியே 23 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் - அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையின் இருபுறமும் 'ப' வடிவ வடிகால் மற்றும் நடைபாதை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, வடிகால் அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார்.அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் பன்னீர், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் ஜெகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை