உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புது வரிகள் விதிக்காமல் திட்டங்கள் நிறைவேற்றி வருகிறோம் முதல்வர் ரங்கசாமி பேச்சு

புது வரிகள் விதிக்காமல் திட்டங்கள் நிறைவேற்றி வருகிறோம் முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: புதிய வரிகளை விதிக்காமல் திட்டங்கள் நிறைவேற்றி வருகிறோம்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார். புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அவர், பேசியதாவது:கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் அடுத்து வந்தவர்கள் லேப்டாப் வழங்கவில்லை. அதன் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியவில்லை.பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை வைக்கப்பட்டுள்ளது. காஸ் சிலிண்டருக்கு சிகப்பு கார்டுக்கு ரூ.300, மஞ்சள் கார்டுக்கு ரூ.150 மானியம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதனை 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பெறுகின்றனர். விடுபட்டவர்களுக்கு மானிய தொகை விரைவில் செலுத்தப்படும்.அனைத்து அரசு துறை காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசு புதிய வரி ஏதும் விதிக்கவில்லை. ஆனால் தேவையான நிதியை எப்படியாவது கொண்டுவந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.வணிகவரி, கலால்வரி மூலம் எண்ணியபடி அரசின் வருவாய் உயர்ந்து வருகிறது. இதற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருப்பதும் ஒரு காரணம். இந்தியாவில் தனி நபர் வருமானம் அதிகமாக உள்ள மாநிலம் புதுச்சேரி. தற்போது 2 லட்சம் ரூபாய் தனிநபர் வருமானமாக உள்ளது.மாநிலத்தின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு எடுத்து வரும் முயற்சிகள், மத்திய அரசு, பிரதமர் மோடி அளிக்கும் ஒத்துழைப்பு தான் காரணம். மாணவர்களுக்கு மொத்தம் ரூ.68 கோடியில் 28 ஆயிரம் தரமான லேப்டாப் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.முருகன் அருளால் வெற்றிமுதல்வர் நெகிழ்ச்சிமுதல்வர் ரங்கசாமி பேசுகையில், இன்று நாளிதழில் ராசிபலனை பார்த்தபோது வெற்றி என குறிப்பிட்டிருந்தது. பட்ஜெட்டில் அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டம் அமலானபோதே, இதை செயல்படுத்துவதில் உள்ள சிரமம் தெரியும். இதற்கு கதிர்காமம் முருகன் அருளால் வெற்றி கிடைத்துள்ளது. குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இங்கேதான் தொடங்கினோம். 50 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தில் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இன்னும் 20 ஆயிரம் பேருக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை