உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உலக கபடி போட்டியில் வென்ற இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து

 உலக கபடி போட்டியில் வென்ற இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி: உலககோப்பை இறுதி மகளிர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். டாக்காவில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பை- 2025 இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி அபாரமாக விளையாடி சீனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவிலான கபடிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பெற்றுள்ள வெற்றி - பெண்களின் சக்தி, தைரியம், திறமை என்ன என்பதை உலகுக்கு மீண்டும் நிருபித்துள்ளது. இந்தச் சாதனை இன்னும் பல பெண் வீராங்கனைகள், தங்கள் திறமைகளையும் திறன்களையும் பயம் இல்லாமல் வெளிப்படுத்த உந்துதலாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. வரலாற்றில் நினைவு கூரத்தக்க சிறப்பான வெற்றியைப் பெற்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய மகளிர் கபடி அணி தொடர்ந்து பிரகாசிக்கவும், புதிய சிகரங்களை அடையவும் புதுச்சேரி மக்கள் சார்பாகவும் என், சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி