உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலெக்டர் அலுவலக பேஸ்புக் முடக்கம்

கலெக்டர் அலுவலக பேஸ்புக் முடக்கம்

காரைக்கால் : காரைக்கால் கலெக்டர் அலுவலக பேஸ்புக் முடக்கப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மக்கள் புகார்களுக்கு உடனுக்கு உடன் கலெக்டர் முன்னிலையில் துறை அதிகாரிகள் தீர்வு கண்டு வருகின்றனர்.பொது மக்களுக்கு உடனுக்கு உடன் தெரியப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம்(Collectorate Karaikal)என்ற பேஸ்புக் தொடங்கி, அரசு விழாக்கள், வேலை வாய்ப்புகள் மற்றும் பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் கலெக்டர் அலுவலக பேஸ்புக் பக்கம் கடந்த இரண்டு நாட்களாக முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் பேஸ்புக் பக்கத்தை முடக்கிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் கலெக்டர் அலுவலக பேஸ்புக் பக்கத்தை சரி செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.சில நாட்களுக்கு முன் கைரேகையை பயன்படுத்தி, பத்திரபதிவு அலுவலகம் மூலம் ரூ.60 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்,கலெக்டர் அலுவலக பேஸ்புக் முடக்கப்பட்டது காரைக்காலில்பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ