உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சிக்னல் பழுது

இந்திரா சதுக்கத்தில் சிக்னல் விளக்குகள் சரியாக எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.முகேஷ்,புதுச்சேரி.

தொடரும் வாகன நெரிசல்

கடலுார் சாலை முருங்கப்பாக்கத்தில் குடிநீர் குழாய் மற்றும் மின்சார கேபிள்கள் புதைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.கந்தன்,முருங்கப்பாக்கம்.

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை

அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.மணிகண்டன், தவளக்குப்பம்.

வாகன ஓட்டிகள் அவதி

முதலியார்பேட்டையில் இருந்து உப்பளம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.ராணி,உப்பளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

AbdulGaffar
ஜன 30, 2024 09:08

தென்காசி வல்லம் மதினா நகர் (627809)திறந்த சாக்கடை ஆறு மற்றும் கிளை ஆறுகள் போல ஓடுகிறது. மக்கள் வசிக்கும் பக்கம் துர்நாட்றம், கொசுக்கள், ஈக்கள். எவ்வளவு முறை சொல்லியும் அரசாங்கம் மௌனம்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை