உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை கழிவுநீர் வடிகால் பிரிவு மற்றும் குடிநீர் பிரிவு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் அழகானந்தம் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை கழிவு நீர் வடிகால் மற்றும் குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் சுந்தரி, உதவி பொறியாளர் பாஸ்கர், இளநிலை பொறியாளர் மார்சல் சகாயராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எதிர்வரும் மழைக் காலங்களில் கதிர்காமம்  தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். வி.எம். கார்டன் பகுதியில் பாதாள சாக்கடை இணைக்கப்பட வேண்டும். கனகன் ஏரி பின்னால் உள்ள 30 ஏக்கர் பரப்பு உள்ள தனியார் இடத்தில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் கழிவு நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிப்பு மையம் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அழானந்தம் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை