உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறடிச்சாலை மேம்பாலம் பக்கவாட்டு சுவரில் விரிசல்

நுாறடிச்சாலை மேம்பாலம் பக்கவாட்டு சுவரில் விரிசல்

புதுச்சேரி : நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி, நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி ரூ. 35.72 கோடி மதிப்பில், கடந்த 2013ம் ஆண்டு துவங்கியது. நீண்ட இழுபறிக்கு பிறகு பணிகள் முடிந்து கடந்த 2018ம் ஆண்டு மேம்பாலம் திறக்கப்பட்டது. மேம்பாலத்தில் ரயில்பாதை மேல் பகுதியில் உள்ள 100 மீட்டர் துாரத்திற்கு மேல்தளத்தில் கான்கிரீட் சாலையும், இணைப்பு பாலம் பகுதி தார் சாலையாக அமைக்கப்பட்டது.இந்த கான்கிரீட் சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு, இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதும், அதனை பொதுப்பணித்துறையினர் கலவை கொட்டி சரிசெய்வதும் தொடர் கதையாக உள்ளது. இதுவரை 11 முறை கான்கிரீட் தள சாலையில் பள்ளம் ஏற்பட்டு அதை மூடியுள்ளனர்.இந்நிலையில், இந்திரா சிக்னலில் இருந்து ஆர்.டி.ஒ., அலுவலகம் செல்லும் பாதை பகுதியில், பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது பெரிதாகி சர்வீஸ் சாலையில் செல்வோர் மீது விழுந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, விரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ