உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டிட்வா புயல் எதிரொலி காரைக்காலில் 4ம் எண் கூண்டு புதுச்சேரி, கடலுாரில் 2ம் எண் கூண்டு

 டிட்வா புயல் எதிரொலி காரைக்காலில் 4ம் எண் கூண்டு புதுச்சேரி, கடலுாரில் 2ம் எண் கூண்டு

புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயலை தொடர்ந்து காரைக்கால் துறைமுகத்தில் 4ம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி மற்றும் கடலுார் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தொடர்ந்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மதியம் சென்னைக்கு தென்கி ழக்கே 700 கி.மீ., துாரத் தில் புயலாக உருவானது. அதனையொட்டி, துறைமுகத்திற்கு வெகு துாரத்தில் புயல் உருவாகி மோசமான வானிலை நிலவுவதை அறிவிக்கும் பொருட்டு காரைக்கால் துறைமுகத்தில் 4ம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி மற்றும் கடலுார் துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி