உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புதுச்சேரி: தை அமாவாசையையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.தை அமாவாசையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு நேற்று தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் கடற்கரையில் திரண்டு, தர்ப்பணம் கொடுத்தனர்.

தீர்த்தவாரி

தை அமாவாசை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில், ஏராளமான சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. புதுச்சேரியில் மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், சின்ன சுப்பராய பிள்ளை வீதி அங்காளம்மன், தண்டுமுத்து மாரியம்மன், கருவடிக்குப்பம் வராகி அம்மன், முத்தியால்பேட்டை அங்காளம்மன், சுந்தர விநாயகர், சுப்ரமணிய சித்தி விநாயகர், லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும் சங்கராபரணி, தென்பெண்ணையாறு கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி