உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டசபையை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் போராட்டம்

சட்டசபையை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் போராட்டம்

புதுச்சேரி : இலவச மனைப்பட்டா வழங்க கோரி நரிக்குறவர்கள் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதகடிப்பட்டு அருகே 60 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டிற்கு முன்பு இதில், 35 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 25 பேருக்கு அடுத்த கட்டமாக இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என அறிவித்து வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க வந்தனர். காவலர்கள் அனுமதி தரவில்லை. இதனால் சட்டசபை நுழைவுவாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபை காவலர்கள் சட்டசபை நுழைவு வாயிலை மூடினர்.பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து முற்றுகையிட்டு அமர்ந்திருந்தனர். போலீசார் நரிக்குறவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தபோது, தள்ளு முள்ளு ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து அங்கிருந்து நகர்ந்து சென்ற நரிக்குறவர்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் முதல்வரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. 3 பேர் மட்டும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை