உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திருக்கனுார், : கூனிச்சம்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை சுதர்சன ஹோமம், அனைத்து மூர்த்திகளுக்கும் எண்ணெய் சாற்றி, பூர்ண அபிஷேகம் நடந்தது.மாலை கலசங்கள் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், முதல் கால பூஜை நடந்தன. நேற்று காலை திரவுபதி அம்மன் கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் நடராஜன், திருகுமரன், கலியபெருமாள், லட்சுமணன், நரசிங்கம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை