உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர் துளிகள் இணைப்பு-

தினமலர் துளிகள் இணைப்பு-

மீண்டும் பலமாக வருவோம்ஜல்லிக்கட்டில் காளை அவிழ்த்து விட்டதை போன்று வினாடி வினா களத்தில் வினாக்கள் புதிர்களுடன் வீசப்பட்டன. பொது அறிவில் வெறித்தனம் காட்டிய மாணவர்கள் பட்டென பதில் சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். பதில் சொல்ல கூற முடியாத கேள்விகளை குவிஸ் மாஸ்டர் ஷ்ரவன் தீபன் மாணவர்களை நோக்கி வீச அதற்கு சட்டென பதில்களை சொல்லி அரங்கத்தை தெறிக்க விட்டனர். பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் அடங்க வெகு நேரமாயிற்று.பரிசு இல்லை என்றாலும் சில கேள்விகளுக்கு ஆசிரியர்கள் வினாடி வினா போட்டியில் அரங்கம் அதிரும் அளவிற்கு பதில்களை சொல்லி, இன்றைய தலைமுறையினருக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என நிரூப்பித்தனர்.வெற்றி பெற்றவர்கள் பரிசுகளுடன் திரும்ப, வெற்றியை தவறவிட்ட மாணவர்கள் அடுத்த முறை பொது அறிவில் பலமாக வருவோம் என நம்பிக்கையுடன் விடைபெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !