மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
18 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
18 hour(s) ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
18 hour(s) ago
வாய்க்கால் அமைக்கும் பணி
18 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில், புதுச்சேரி தெற்கு அணியும், வடக்கு அணியும் வெற்றி பெற்றுள்ளன.கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்.நிறுவனம் இணைந்து நடத் தும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த 2ம் தேதி துவங்கியது.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு நடந்த போட்டியில் மாகி அணியும், புதுச்சேரி தெற்கு அணியும் மோதின. முதலில் ஆடிய மாகி அணி 14.2 ஓவர்களில் 59 ரன்களில் ஆட்டமிழந்தது. கரண் கண்ணன் 3 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து, ஆடிய புதுச்சேரி தெற்கு அணி 9.4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 60 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கரண் கண்ணன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.தொடர்ந்து, நேற்று மதியம் 3 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி வடக்கு அணியும், ஏனாம் அணியும் மோதின. டாஸ் வென்று புதுச்சேரி வடக்கு அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் ஆடிய புதுச்சேரி வடக்கு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.புதுச்சேரி வடக்கு அணியின் சுனில் குமார் 53 பந்துகளில் 64 ரன்களும் அரவிந்த் ஆகாஷ் 30 பந்துகளில் 55 ரன்களும் அடித்தனர்.தொடர்ந்து, ஆடிய ஏனாம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 129 ரன்கள் அடித்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் புதுச்சேரி வடக்கு அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.புதுச்சேரி வடக்கு அணியின் உமர் பட்னியின் சிறப்பான பந்து வீச்சால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago