| ADDED : மார் 20, 2024 01:39 AM
புதுச்சேரி : 'இண்டியா' கூட்டணி ஓட்டுகளை சிதறடித்து பா.ஜ.,வுக்கு பலம் சேர்க்கிறார் நேரு எம்.எல்.ஏ.,' என, புதுச்சேரி தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நேரு எம்.எல்.ஏ.,கடந்த, 3 ஆண்டுகளாக பா.ஜ., அரசுக்கு ஒரு புறம் ஆதரவும், மறுபுறம் இந்த அரசு, மாநில அந்தஸ்து பெறவில்லை என்று,பல சமூக அமைப்புகளை திரட்டி'பொது வேட்பாளர்' என்று பாவலா காட்டி வருகிறார்.இதன் மூலம் 'இண்டியா' கூட்டணி ஓட்டுகளை சிதறடிக்கும் நாடகத்தை அரங்கேற்றுகிறார். அவர், பா.ஜ., அணிக்கு தேர்தல் ஆதாயம் தேட முயல்கிறார்.மாநில உரிமை பறி போய் விட்டது,அதற்கு தீர்வுகாண பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்' என,சுட்டிக்காட்டியவர், கூட்ட இறுதியில் எந்த முடிவுக்கும் வரவில்லை.'இண்டியா' கூட்டணி ஓட்டுகளை சிதறடித்து பா.ஜ.,வுக்கு பலம் சேர்க்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.