| ADDED : மார் 06, 2024 03:19 AM
புதுச்சேரி : கொம்பாக்கத்தில், புதிய வாய்க்கால் அமைக்கும் பணியை, எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.வில்லியனுார் தொகுதி, கொம்பாக்கம் வார்டில், பிள்ளையார் கோவில் முதல் மார்க்கெட் வரையில் ஒரு புறமும், மார்க்கெட்டிலிருந்து அருணாச்சலா ஹோட்டல் வரை இருபுறமும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைப் பிரிவு மூலம், 'யு' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கியது.இதன் திட்ட மதிப்பீடு ரூ. 98 லட்சத்து 92 ஆயிரம். இப்பணியை, எதிர்க்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவிப் பொறியாளர் ஜெயராஜ், இளநிலைப் பொறியாளர் மனோகரன், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.