உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு

திருக்கனுார்: கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மனநலத் திட்டம் சார்பில் போதை பொருள் ஏதிரான விழிப்புணர்வு மற்றும் மனநலம் குறித்த கருத்தரங்கம், நாடகம் நடந்தது. தலைமை ஆசிரியர் அப்துல் மாலிக் தலைமை தாங்கினார். முனைவர் மோகன்ராஜ் நோக்கவுரையாற்றினார். ஆசிரியர் சாந்தி வரவேற்றார். கலைமாமணி ராஜா வாழ்த்தி பேசினார். தேசிய மனநல மருத்துவர் கஜலட்சுமி போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நல்வழிகள் குறித்து விளக்கினார். மனநல பயிற்சி மருத்துவர் பொன்மணி, மன அழுத்தம் குறித்தும், அதிலிருந்து விடுபடக்கூடிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். சக்தி விக்னேஷ் நாடக மன்றத்தின் கலைமாமணி பாரதி, நந்தகோபால், விஜி, சகாயராஜ், சதீஷ், மூர்த்தி, திவான் ஆகியோர் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் நடந்தது. ஆசிரியர் பொற்செல்வி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிவசுப்ரமணியம், கல்பனா, சம்பத், பரணி, புவனேஸ்வரி, கயல்விழி, பரிமளா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை