உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.பி.சி., இட ஒதுக்கீட்டை உயர்த்தக்கோரி மீனவர் கிராமங்களில் பிரசார ஊர்வலம்

இ.பி.சி., இட ஒதுக்கீட்டை உயர்த்தக்கோரி மீனவர் கிராமங்களில் பிரசார ஊர்வலம்

புதுச்சேரி: மீனவர்களுக்கான இ.பி.சி., இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தக்கோரி இருசக்கர வாகன பிரசார ஊர்வலம் நடந்தது.புதுச்சேரியில் பெரிய சமுதாயமாக உள்ள மீனவர்களுக்கு இ.பி.சி.,யின் கீழ் 2 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதனை 10 சதவீதமாக உயர்த்த கோரி, புதுச்சேரி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து மற்றும் அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திகுப்பம் வரை ஊர்வலம் நடந்தது.பெரிய வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம், கனகசெட்டிக்குளம், காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி, சோலை நகர் வடக்கு, தெற்கு, வைத்திக்குப்பம் குருச்சிக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், புதுகுப்பம், நல்லவாடு, பனித்திட்டு, நரம்பை, மூர்த்திக்குப்பம் பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர்.தொடர்ந்து 18 மீனவ கிராமங்கள் வழியாக சென்ற ஊர்வலத்தில் மீனவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை மீனவ பஞ்சாயத்தர்கள் புத்துப்பட்டார், சந்திரன், குமரன், கூட்டமைப்பின் தலைவர் பெரியாண்டி மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை