| ADDED : ஜன 05, 2024 06:44 AM
புதுச்சேரி : மூன்று தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவது கண்டனத்திற்குறியது என, முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் புதுச்சேரி உள்ளாட்சித்துறையில் நகர வாழ்வதார மையத்தில் 300 பேர் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நகர்ப்புற சுகாதார மேம்பாடு உட்பட பல பணிகளை செய்து வந்தனர். புதுச்சேரி அரசு புத்தாண்டு பரிசாக 300 பேரையும் பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.முதல்வர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, 3 தொகுதிகளை சேர்ந்தவர்களை கொண்டு 300 பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார். 3 தொகுதி மீது மட்டும் முதல்வர் தனி பாசம் காட்டுவது கண்டனத்திற்குரியது. ஒரு கண்ணில் வெண்ணை, மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற ரீதியில் வேலை வாய்ப்புகளை 3 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்குவது கருணையற்ற செயல்.எனவே உள்ளாட்சித்துறை அறிவித்த தற்காலிக பணியாளர்கள் 300 பேர் நீக்கம் உத்தரவை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். தொகுதிக்கு 10 பேர் என, 30 தொகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பை பகிர்ந்தளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.