உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இ.பி.எஸ்., பேசுகிறார்: மா.சுப்பிரமணியன்

பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இ.பி.எஸ்., பேசுகிறார்: மா.சுப்பிரமணியன்

புதுச்சேரி: கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்துகள் கையிருப்பில் உள்ளன . ஆனால் அந்த மருந்து இல்லை என பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இ.பி.எஸ்., பேசுகிறார் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் சிகிச்சை பெறும் 17 பேரில் 8 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் அருந்தியவருக்கும் இன்று பாதிப்பு கண்டறியப்பட்டது.பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடாது. கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும், ‛ OMEPRAZOLE ' மருந்து கையிருப்பில் இல்லை என பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் பேசி உள்ளார். ஆனால், சிகிச்சைக்கு தேவையான அளவு 4.42 கோடி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் பொய்யான குற்றச்சாட்டை கூறியுளளார். அவரின் பேச்சு எரியும் நெருப்பில் குளிர்காய்வது போல் உள்ளது.கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வர தயங்கியதால் இந்தளவு உயிரிழப்பு ஏற்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட போதும் அவர்கள் மருத்துவமனைக்கு வர மறுத்தனர். ஆனால், 55 பேர் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

S. Neelakanta Pillai
ஜூன் 22, 2024 17:26

50 பேர் செத்துப் போனது உனக்கு பதட்டமாக தெரியவில்லை எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது தான் பதற்றமாக தெரிகிறது, என்ன மனிதர்கள் இவர்கள்..... கொலைகாரர்கள்


Jai
ஜூன் 22, 2024 12:44

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் செய்யும் என்று கேட்டது ஞாபகம் இருக்கிறதா?


இராம தாசன்
ஜூன் 21, 2024 23:59

அவர் என்ன உங்க கூட்டணி கட்சி தலைவரா ? உங்கள் தலைவர் சொன்னாரே - எதிர் கட்சி என்றால் அரசியல் தான் செய்வார்கள்


அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 21, 2024 22:04

எதிர்க்கட்சிகள் தேவையானதை பேசதான் செய்வார்கள்.தினமும் யோசித்து யோசித்து மக்களுக்கு நல்லது செய்பவர்கள் போல பேசுகிறீர்கள்..ஒவ்வொரு பேருந்து நிலையம் முன்பும் மதுக் கடைகள்.தற்போது மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு புதுக்கடை உதயம்.மதுவை அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள் அருகில் அமர்பவர்கள் நிலைமையை இந்த அரசு எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா..இலக்கு வைத்து மது விற்பனை செய்கிறீர்கள்.இதுவெல்லாம் வெட்கக்கேடு.பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்யக்கூடாது.கள்ளச்சந்தையில் புகையிலை,கஞ்சா,கள்ளச்சாராயம் விற்ற நபர்களும் கடைகளில் மது விற்கும் அரசும் ஒன்றே.உங்கள் பணப்பசி மற்றும் அதிகாரப் பசிக்கு அப்பாவி மக்களை காவு கொடுக்காதீர்கள்.


வாய்மையே வெல்லும்
ஜூன் 21, 2024 21:35

அவரவர் வீட்டில் எழவு விழுந்தால் தான் வழியும் நோவும் புரியும். வாய்க்கு வந்தபடி பேசிட்டே போனாக்க விதண்டாவாதம் மிச்சமாகும் . கள்ளச்சாராய சாவு தமிழகத்துக்கு இழுக்கு. அதை எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யத்தான் செய்வார்கள் அரசியல் அல்லாமல் ஆவியலா செய்வார்கள் ??


Senthil K
ஜூன் 21, 2024 20:58

பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட துணை போன திமுகவிற்கு.. 52 உயிர்கள்.. சர்வ சாதாரணமான விஷயம் தான்... ஆமாம்.. மந்திரி சார்.. உங்கள் வீட்டில் யாராவது.. இப்படி இறந்தால் ஏற்றுக் கொள்வீறா?? பதட்டம் இல்லாமல் பணம் சம்பாதிப்பதை.. பார்ப்பீறா???


Balaji
ஜூன் 21, 2024 20:29

ஐயோக்கிய சிகாமணிகள் பேசுகிறார்கள்.. தற்கொலைகளை அரசியலாக்கி தமிழ் மக்களை மாக்களாக ஆக்கி ஏமாற்றுவேலை செய்யும் தர்க்குறிகள் தத்துவம் பேசுகிறார்கள்.. பொறுப்பைப்பற்றி பாடம் எடுக்கிறார்கள்.. அய்யகோ..


Shekar
ஜூன் 21, 2024 20:26

பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து போடுறாங்கன்னுதான் பல மீம்ஸ், யூடுயூப் ஆள்களை குண்டாசில் போடுறீங்க, அப்படி பார்த்தா எடப்பாடியையும் குண்டாசில் போடா போகிறீர்களா?


Prabakaran J
ஜூன் 21, 2024 20:18

Ithuku anthe collector sonnathe paravaillai... MaSu vechittaru DMK appu


Govind Puramm
ஜூன் 21, 2024 20:14

நாங்கள் முப்பெரும் விழா நடத்தப்பட்டது தொடர்ந்து யாரோ இங்கு கள்ளச்சாராயம் காச்சி அரசுக்கு குந்தகம் ஏற்படுத்த திட்டமிட்டது இன்னும் சில தினங்களில் மீடியாவில் வரும்


மேலும் செய்திகள்