| ADDED : ஜன 14, 2024 03:55 AM
புதுச்சேரி, : பூரணங்குப்பத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.புதுச்சேரி இந்தியன் எக்ஸ் சர்வீஸ் லீக் நலச்சங்கம் சார்பில், பூரணங்குப்பத்தில் சமத்துவ பொங்கல் அப்பகுதியை சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரர்கள் கொண்டாடினர்.நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். தொடர்ந்து பொங்கலிட்டு, வழிபட்டனர். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் செங்கரும்பும், மஞ்சள் கொத்தும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.