| ADDED : பிப் 02, 2024 03:40 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இந்தாண்டிற்குள் செலவு செய்வது குறித்து, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்தார்.ஆய்வில், அரசு ஒதுக்கிய நிதி, வங்கிகளின் மூலம் கடன் பெற்று நடைபெறும் பணிகள், மத்திய அரசு ஒதுக்கிய நிதிகளில் நடைபெறும் பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி, செலவு செய்யப்பட்ட நிதி, செலவு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது.வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, அவற்றின் செயல் திட்டம், செயல்படுத்தவேண்டிய கால அளவு, மீனவர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு தடையில்லாமல் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.மீன்வளத் துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் முகமது இஸ்மாயில் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்ய வேண்டும் எனவும், நடைபெறும் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்கவும் அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.