மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
19-Mar-2026
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
19-Mar-2026
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
19-Mar-2026
காரைக்கால் : காரைக்காலில் மீன் இறக்கும் போது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்த மீனவர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.காரைக்கால் மேடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராமக்கண்ணன்,52; இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் ராமக்கண்ணன் மீன்பிடிக்க பட்டினச்சேரியை சேர்ந்த முனியாண்டி படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.பின்னர் நேற்று அதிகாலை மீன்பிடித்துவிட்டு கருக்களாசேரி மீன்பிடித்துறைமுகத்தில் மீன் இறக்கும் போது ராமக்கண்ணன் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளார்.பின் சக மீனவர்கள் உதவியுடன் அவரை மீட்டு அரசு மருந்துவனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Mar-2026
19-Mar-2026
19-Mar-2026