உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர் தின விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு

மீனவர் தின விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு

புதுச்சேரி : உலக மீனவர்கள் தின கொண்டாட்டத்தை யொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மீனவர்கள் மற்றும் மாணவர்களுக்கு, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், 21-ந்தேதி உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதை கொண்டாடும் வகையில், வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கும் அங்குள்ள மாணவர்களுக்கும் சமீபத்தில் பல்வேறு விதமான போட்டிகள் நடந்தன.இதில் கோலம், வலை பின்னுதல், பேச்சு, கட்டுரை, ஓவியம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில், ஏராளமானோர் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு முதல் பரிசு ரூ. 3000; இரண்டாம் பரிசு ரூ.2000; மூன்றாம் பரிசு ரூ.1000; என வழங்கப்பட்டது.நேற்று நடந்த நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தனது கட்சி அலுவலகத்தில் சான்றிதழ்களுடன், பரிசுத்தொகையை வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியின் போது, மீன்வளத் துறை ஆய்வாளர் ஐயனார், உதவியாளர் வெங்கடேச பெருமாள், ஆசிரியர்கள், மாணவர்கள், திமுக நிர்வாகிகள் சக்திவேல், ஹரிகிருஷ்ணன், நோயல், விநாயகமூர்த்தி, இருதயராஜ், ராகேஷ், பரணி ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்