உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில், அரசு நலவழித்துறை, பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.முகாமை, அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். ஸ்கேன் இயந்திரத்தை திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கினார்.சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன் வரவேற்றார்.முகாமில், பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, கண், பல் மற்றும் காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு அட்டைதாரர்கள், 70 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக காப்பீடு பதிவு செய்யப்பட்டது.முன்னதாக, தொகுதியில் உள்ள காசநோயாளிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க தனது சொந்த செலவில் அமைச்சர் நமச்சிவாயம் 35 ஆயிரம் ரூபாயை மருத்துவ அதிகாரியிடம் வழங்கினார்.குடும்ப நலத்றை துணை இயக்குநர் அனந்தலட்சுமி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை துணை இயக்குநர் மாலதி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ