| ADDED : ஜன 09, 2024 07:17 AM
பாகூர் : வீட்டில் துாங்கிய பெண், நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்த வார்க்கால் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் முருகையன், 45; தனியார் நிறுவன செக்யூரிட்டி. இவரது மனைவி மஞ்சுளா 43. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, அனைவரும் கறி குழம்பு சாப்பாடு சாப்பிட்டு விட்டு துாங்கி உள்ளனர். நள்ளிரவு 12:00 மணியளவில் மஞ்சுளா தனக்கு நெஞ்சு வலிப்பதாக முருகையனிடம் கூறி உள்ளார். உடனே, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து மஞ்சுளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மஞ்சுளா திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.