| ADDED : நவ 17, 2025 02:47 AM
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர்கள் பதவி உயர்வு வழங்க கோரி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளி ல் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனையடுத்து, பதவி உயர்வு வழங்க கோரி, அரசு கல்லுாரி பேராசிரியர்கள் காரைக்காலில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . கூட்டு ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் சங்கரியா முன்னிலை வகித்தார். புதுச்சேரி காங்., முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், காங்., பிரமுகர் ரமேஷ் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து பேசினர். காரைக்கால் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 100 உதவி பேராசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவ்விகாரத்தில் கவர்னர், முதல்வர், உயர்கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி, பதவி உயர்வை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உதவிப் பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.