உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை; திட்ட பணிகளை வேகப்படுத்த கவர்னர் உத்தரவு 

பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை; திட்ட பணிகளை வேகப்படுத்த கவர்னர் உத்தரவு 

புதுச்சேரி : புதுச்சேரியில் கடல்பாசி மற்றும் கூண்டு மீன் வளர்ப்பு குறித்து கவர்னர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.மீன்வளத்துறை சார்பில், கூண்டு மீன் மற்றும் கடல் பாசி வளர்ப்பு திட்டங்களுக்கான ஆய்வுப் பணி துவங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுச்சேரி அரசு மற்றும் மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் இடையில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் கடந்த மாதம் கையெழுத்தானது.அதனையொட்டி, பனித்திட்டு மற்றும் புதுகுப்பத்தில்பூர்வாங்க ஆய்வுப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இது குறித்து முதன்மை விஞ்ஞானிகள் சார்லஸ் ஜீவா, ஜான்சன் ஆகியோர் கவர்னரிடம் விளக்கினர்.கடல் பாசி வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றனர். கடல்பாசி 45 நாட்களுக்கு ஒரு முறையும், கூண்டு மீன் வளர்ப்பு ஒன்பது மாதத்திலும் அறுவடைக்கு தயாராகும் என்றனர்.இதையடுத்து, கவர்னர், வரும் செப்., மாதம் பிரதமர் மோடி புதுச்சேரி வர வாய்ப்பு உள்ளது. அப்போது கடல் பாசி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். அரசு செயலர் மணிகண்டன், மீனவர் நலத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை