உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்பு

ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்பு

புதுச்சேரி: ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கவர்னர் கைலாஷ்நாதனை பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டியும், அவரது 25 ஆண்டு கால மக்களை சேவையை பாராட்டும் வகையில் நாடு முழுதும் ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி, மண்ணாடிபட்டு தொகுதி திருக்கனுாரில், கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் ஆசிர்வாத தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கவர்னர் கைலாஷ்நாதனுக்கு அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்