உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓட்டு திருட்டு கையெழுத்து இயக்க படிவம் ஒப்படைப்பு

 ஓட்டு திருட்டு கையெழுத்து இயக்க படிவம் ஒப்படைப்பு

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் காங்., சார்பில் ஓட்டு திருட்டை கண்டித்து நடந்த கையெழுத்து இயக்க படிவம் மாநில தலைவர் வைத்திலிங்கத்திடம் வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநில காங்., கமிட்டி சார்பில் ஓட்டுத் திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் தொகுதி வாரியாக நடத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., சார்பில் வட்டாரத் தலைவர் பரமசிவம், மாநில பொதுச்செயலாளர்கள் சுரேஷ், முத்துரங்கம், செயலாளர் ரகுபதி தலைமையில் வீடு வீடாக சென்று, 9 ஆயிரம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதன் மூலம் பெறப்பட்ட கையெழுத்து படிவத்தை மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தராமன் ஆகியோரிடம் தொகுதி நிர்வாகிகள் வழங்கினர். இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ