உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி

வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி

புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி, முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் உள்ள அலர்மேல் மங்கை சமேத சீனுவாசப் பெருமாள் கோவிலில்,வரும் 11ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. இதையொட்டி, நாளை மறுநாள் 10ம் தேதி ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசத்தில்சிறப்பு அலங்காரம் நடக்கிறது. 11ம் தேதி காலை 9:00 மணிக்கு 504 லிட்டர் பால், 27 பழவகைகள், 108 இளநீர், தேன் மற்றும் சந்தனம் கொண்டு மகா அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன், இரவு ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை