உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கன்னியக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 

கன்னியக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 

பாகூர்: கன்னியக்கோவில் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் மண்ணாதீஸ்வரர் உடனுறை பச்சை வாழியம்மன் கோவில் வளாகத்தில் சாந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. தினமும்,வெற்றிலை, வாழைப்பழம், எலுமிச்சை, காய்கனி, வெண்ணெய், புஷ்பம், சந்தனம் உள்ளிட்டவற்றால் அலங்காரம் மற்றும் திருமஞ்சனம் நடந்து வந்தது.முக்கிய நிகழ்வான அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 7.30 மணிக்கு,பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிேஷகம் , சிறப்பு திருமஞ்சனம் மகா தீபாரதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ