வீடு புகுந்து திருட்டு: மர்ம நபருக்கு வலை
புதுச்சேரி: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனுார், கணுவாப்பேட்டையை சேர்ந்த சுப்ரமணியன், 45; தனியார் கம்பெனி ஊழியர். இவரும் இவரது மனைவியும் கடந்த 16ம் தேதி காலை 8:30 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். இரவு 7:30 மணிக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பீரோவில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரு பித்தளை குத்து விளக்குகளை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.